"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் ஆயிரம் நாட்டலை விட புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" - மகாகவி பாரதியார்
என்ற வரிகளின் உந்துதலால் கிராமப்புற ஏழை மக்களின் அரசாங்க வேலை வாய்ப்பு கனவுகளை நினைவாக்க 2019 ஆம் ஆண்டு முதல் எங்களின் நிதிழ் அகாடமி ஆனது அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க பணிகளில் உள்ள அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி ஆர்வம் மிக்க மாணவர்களையும் அனுபவம் மிக்க ஆசிரியர்களையும் கொண்டு சேவை மனப்பான்மையுடன் தன்னார்வலர்கள் மூலம் ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறது.
செல்பேசிகளை பொழுதுபோக்காக பயன்படுத்தி வந்த இளைஞர்களுக்கு ஒரு நல் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தி வந்த நிதிழ் அகாடமி நிறுவனம் கிராமப்புற மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொடுக்கும் பொறுப்பு மிக்க காரணத்தால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவை மையமாகக் கொண்டு 2024 முதல் அனைத்து அரசாங்க வேலை போட்டி தேர்வுகளுக்கான நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை வழங்கி வருகிறது.
கல்வியை எல்லா வகையிலும் வியாபாரமாக ஆக்கிவிட்ட இந்த காலகட்டத்தில் இளைஞர்களிடம் உள்ள தனித்திறமைகளை அறிந்து அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வேலை வாய்ப்புகள் தொடர்பான அறிவுரைகள் வழங்குவதைக் கூட வியாபாரமாக ஆகிவிட்ட நிலையில் அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும், அரசாங்க வேலை தொடர்பான புரிதல் இல்லாத இளைஞர்களுக்கும் இலவச ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதை இலக்காக கொண்ட எங்கள் நிறுவனத்தில் இதுவரை பயிற்சி பெற்று அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் பணியில் அமர்ந்துள்ள 100+ க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல்களும் அறிவுரைகளும் கொடுத்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு உந்து சக்தியையும், தன்னம்பிக்கையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
"ஒருவரின் அரசாங்க வேலை ஒரு சந்ததியின் ஆணிவேர்" - நிதிழ்அகாடமி